கேபிள் கார் விபத்தில் ஏழு பிக்குகள் மரணம்! – குருநாகலில் துயரம்.

குருநாகல் – மெல்சிரிபுரவின் பன்சியாகமவில் உள்ள பௌத்த வன ஆச்சிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் 7 பௌத்த பிக்குகள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு 9 மணியளவில், புனித தலத்தில் மதச் சடங்குகளை முடித்துவிட்டு மலை உச்சியில் உள்ள தியான மண்டபத்துக்குப் பிக்குகள் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கேபிள் காரின் கம்பி அறுந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பிக்குகளில் இருவர் வெளிநாட்டுப் பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
.
விபத்து இடம்பெற்ற நேரத்தில் 13 பிக்குகள் கேபிள் காரில் இருந்தனர் எனக் கூறப்படுகின்றது.

விபத்தின்போது கேபிள் காரில் இருந்து குதித்த இரண்டு பிக்குகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

படுகாயமடைந்த 4 பிக்குகள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த பிக்குகளின் சடலங்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்த்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.