யாழில் மாணவிகளுக்குப் பாலியல் சீண்டல்: ஆசிரியர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு!

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவிகளுடன் அங்கசேட்டையில் ஈடுபட்டார் என்று ஆசிரியர் ஒருவருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிகள் மீதே அந்த ஆசிரியர் அங்க சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், மாணவர்கள் தமது பெற்றோருக்குத் தெரியப்படுத்திய நிலையில், பெற்றோரால் பாடசாலை நிர்வாகத்திடம் முறையிடப்பட்டுள்ளது.

எனினும், பாடசாலை நிர்வாகம் உடன் நடவடிக்கைகளை எடுக்காததைத் தொடர்ந்தே, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.