உங்களைப் பார்த்தாலே பயம்! ஆவியாக வந்துவிட வேண்டாம்!! – சாமர எம்.பிக்கு நீதி அமைச்சர் பதிலடி.

“உங்களின் முகத்தைப் பார்த்தாலே பயமாகத்தான் இருக்கின்றது. காலையில் பார்த்தால்கூட அப்படிதான். எனவே, தயவு செய்து ஆவியாக வந்துவிட வேண்டாம். நாம் உங்களைப் பாதுகாப்போம். அச்சப்பட வேண்டாம்.” – என்று புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்துக்குப் பதிலடி கொடுத்தார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சாமர சம்பத் தஸநாயக்க எம்.பி., “என்னைக் கொலை செய்தால் ஆவியாக வந்தேனும் பழிவாங்குவேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே நீதி அமைச்சர் சிரித்தபடி மேற்கண்டவாறு கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.