மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி செம்மணியில் இன்று போராட்டம்.
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் – செம்மணி வளைவுக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை மெதடிஸ்த திருச்சபை மற்றும் நீதிக்கும் சமாதானத்துக்குமான பணிக் குழு ஆகியவை இணைந்து முன்னெடுத்த இந்தப் போராட்டத்தில் மதத் தலைவர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் கலந்துகொண்டு செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரினர்.



