ஒன்பது மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி முதல் நாளை புதன்கிழமை மாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது

பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மொனராகலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.