மன்னாரில் மாடுகளைப் பார்க்கச் சென்ற உயர்தர வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு!
மன்னாரில் தமக்குச் சொந்தமான மாடுகளைப் பார்க்கச் சென்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.
மன்னார்,கற்கிடந்தகுளம் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் அகிலன் (வயது 18) என்ற உயர்தரம் கற்கும் மாணவனே சடலமாக மீட்கப்பட்டார்.
மேற்படி மாணவன் மாடுகளைப் பார்ப்பதற்கு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை வீட்டை விட்டு வெளியேறினார். இரவாகியும் அந்த மாணவன் வீட்டுக்கு வராததைத் தொடர்ந்து மாணவனின் தந்தை கிராம மக்கள் உதவியுடன் அவரைத் தேடி வந்த நிலையில், நேற்று புதன்கிழமை மாணவன் கற்கிடந்தகுளம் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
