இரணைமடுக் குளத்தின் 8 வான் கதவுகள் திறப்பு!

வன்னி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்யும் மழையால் கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் எஸ். முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பேரிடரால் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான கொடுப்பனவுகள் துரிதகதியில் வழங்கப்படுகின்றது. அத்துடன், பேரிடரால் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் கால்நடைகள் இறந்தன. இது தொடர்பிலும் பதிவுகள் நடைபெறுகின்றன.

வன்னி மாவட்டத்தில் கிடைக்கும் கனமழையால் இரணைமடுக் குளத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. கிடைக்கும் மழையின் அளவைப் பொறுத்து வான் கதவுகளை மேலும் திறப்பதா அல்லது பூட்டுவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும். தாழ்நிலப் பகுதி மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.