வவுனியாவில் நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி!

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்துக்கு நேற்று மாலை குளிக்கச் சென்றுள்ளனர். இதன்போது அந்த மாணவர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது ஒரு மாணவன் நீரில் முழ்கி மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர் வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சிவலிங்கம் டனுசியன் என்ற உயர்தர வகுப்பு மாணவனே உயிரிழந்தவராவார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மாமடுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.