மண்மேடு சரிந்து வீழ்ந்து மூவர் பரிதாப உயிரிழப்பு! – ஹோட்டல் நிர்மாணப் பணியின்போது துயரம்.

மண்மேடு சரிந்து வீழ்ந்து மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

அஹங்கம பெலஸ்ஸபகுதியில் ஹோட்டல் நிர்மாணப் பணியின்போது நேற்று மதியம் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை, அனுராதபுரம் மற்றும் மாத்தறை பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.