சுயநிர்ணய உரிமையுடன் இனப்பிரச்சினைக்குத் தீர்வு – ஐக்கிய சோசலிசக் கட்சி வலியுறுத்து.

தேசிய இனப்பிரச்சினைக்குச் சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐக்கிய சோசலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் விசேட கூட்டமொன்றை அந்தக் கட்சி எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ். நல்லூரில் நடத்துகின்றது.

கட்சித் தலைவரான சிறிதுங்க ஜயசூரிய சிறப்பு பேச்சாளராக பங்கேற்று, தமிழ் மக்களுக்குக் கௌரவமானதொரு தீர்வை வழங்குமாறு வலியுறுத்தவுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும், வடக்கு மீன சமூகத்தின் பிரச்சினைகள் உடன் தீர்க்கப்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.