திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று மீண்டும் போராட்டம்!

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரையை உடனடியாக அகற்றுமாறு கோரியும், திஸ்ஸ விகாரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் இன்று சனிக்கிழமையும், நாளை ஞாயிற்றுக்கிழமையும் திஸ்ஸ விகாரைக்கு அருகாக போராட்டம் இடம்பெறவுள்ளது.

இன்று மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையும், பௌர்ணமி நாளான நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையும் போராட்டம் நடைபெறும்.

இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.