கெஹலியவின் மகள் பிணையில் விடுவிப்பு.
இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கொழும்பு பிரதம நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில் அவர் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபரை தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவால் முறையற்ற வகையில் ஈட்டப்பட்ட பணத்தை முறையற்ற வழிகளில் கையாள்வதற்கு உதவியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சமித்ரி ரம்புக்வெல இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் நேற்று முற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.
