2027 வரை எதுவும் இல்லை! போராட்டம் செய்தாலும் பயன் இல்லை என்றும் ஜனாதிபதி நேரடி அறிவிப்பு.

வரும் 2027 ஆம் ஆண்டு சம்பள உயர்வு வரும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றும் முகமாக நேற்று மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2025, 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 33 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகின்றது.

அதற்கமைய, 2027 ஆம் ஆண்டில் மூன்றாவது சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்ட பின்னர், வரவு – செலவுத் திட்டத்தில் ஏற்படும் தாக்கத்தைக் கருத்திள்கொண்டே ஏனைய கொடுப்பனவுகள் குறித்துப் பரிசீலிக்கப்படும். அதுவரை யார் எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்தாலும் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.