யாழ். பல்கலை பொதுப் பட்டமளிப்பு விழா: 2 ஆம் நாளில் மின்னிய சாதனை மாணவி! – முகாமைத்துவ பீடத்தில் 7 தங்கப் பதக்கங்களைச் சூடிய ஜஸ்மின் யூலிற்றா.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் இரண்டாம் நாள் அமர்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகிய இந்தப் பட்டமளிப்பு வைபவம் நாளைமறுதினம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை 12 அமர்வுகளாக நடைபெறுகின்றது.

இன்றைய அமர்வில் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தைச் சேர்ந்த மாணவி செல்வி தங்கராசா ஜஸ்மின் யூலிற்றா ஏழு தங்கப் பதக்கங்கள் உட்படப் பணப்பரிசில்களையும் பெற்றுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.