யாழ். போதனாவில் குருதித் தட்டுப்பாடு! ஓ பொசிடிவ் குருதிக்கு கடும் நெருக்கடி நிலை.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கியில் குருதிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும், ஓ பொசிடிவ் குருதிக்கு கடும் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஓ பொசிடிவ் வகைக் குருதி உடையவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிக்கு நேரடியாக வருகை தந்து குருதிக்கொடை வழங்கி உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.