சத்தீஸ்கரில் கோர விபத்து: வேதாந்தா மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து 10 பேர் பலி!

சத்தீஸ்கர்,

சத்தீஸ்கரின் சக்தி மாவட்டம் சிங்கிதாரி கிராமத்தில் உள்ள வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு பெரிய தொழிற்சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். முதற்கட்ட அறிக்கைகளின்படி ஆலைக்கு உள்ளேயே இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்ததால் பெரும் குழப்பமும் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் 40 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர் 40 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ராய்காட் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

கொதிகலன் வெடித்த பகுதியில் மேலும் சில தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. அங்கு போலீசாருடன் மாவட்ட நிர்வாகம் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.