சுரேஷ் சலேயின் மனு மீதான இடைக்கால மனுக்கள் விசாரணை எதிர்வரும் 6ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சமர்ப்பித்துள்ள மனுவில் தலையிட்டு கருத்துக்களை முன்வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் மீதான பரிசீலனை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று ஆரம்பமானது.

இதன்போது, குறித்த இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்த ‘தேசஹிதைஷி தேசிய இயக்கம்’ மற்றும் ‘தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம்’ ஆகிய அமைப்புக்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தமது ஆரம்ப வாதங்களை முன்வைத்தனர்.


இரு தரப்பு வாதப் பிரதிவாதங்களையும் கவனத்தில் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த இடைக்கால மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனையை எதிர்வரும் 6ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சுரேஷ் சலேயின் மனைவியும் நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.