நுவரெலியாவில் ஆற்றுக்குள் கவிழ்ந்த தனியார் பஸ்! – சாரதி, நடத்துநர் உயிர் தப்பினர்.
நுவரெலியா பஸ் நிலையத்துக்கு அருகில், கிரெகரி ஏரியை ஒட்டியுள்ள தலகல ஓயாவுக்குள் தனியார் பஸ் ஒன்று இன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியாவிலிருந்து சாந்திபுர நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ், பஸ் நிலையத்துக்கு அருகில் நிறுத்த முற்பட்டபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தலகல ஓயாவுக்குள் பாய்ந்து கவிழ்ந்துள்ளது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பஸ்ஸினுள் சாரதியும் நடத்துநரும் மாத்திரமே இருந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக, இவ்விருவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்று நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
