இலங்கை வெளிவிவகாரச் செயலரைச் சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி!

கொழும்புக்கு இன்று ஒரு நாள் பயணமாக வருகை தந்துள்ள இந்தியாவின் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, இலங்கை வெளிவிவகாரச் செயலர் திருமதி அருணி ரணராஜாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும், நெருக்கமான இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இருவரும் இதன்போது விரிவாகக் கலந்தாலோசித்தனர்.

இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கையிலும், ‘மகாசாகர்’ தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதிலும் இலங்கையின் மையப் பங்கை இந்திய வெளியுறவுச் செயலர் இந்தச் சந்திப்பின் போது மீண்டும் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.