அரசுப் பள்ளி மதிய உணவில் பிரியாணி? தமிழ்நாடு அரசின் பரிசீலனையில் புதிய திட்டம்!

இந்தியாவின் தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு, விரைவில், மதிய உணவுத்திட்டத்தின் கீழ், வாரத்தில் ஒரு நாள் பிரியாணி வழங்கப்படலாம் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

விரைவில் பள்ளிகளில் பிரியாணி?
2026 – 2027ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், நேற்று, தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான ராஜ்மோகனை சந்தித்த 80க்கும் மேற்பட்ட ஆசிரியர் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள், சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள்.

அரசு மதிய உணவுத் திட்டத்துக்காக வழங்கும் அரிசியின் தரத்தை மேம்படுத்தவேண்டும் என்றும், பிள்ளைகள் பள்ளிக்கு வருவதை ஈர்க்கும் வகையில், வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்யவேண்டும் என்றும் அவர்கள் அமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

அப்போது, இந்த விடயம் ஏற்கனவே முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் ராஜ்மோகன், அது பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.