மிஸ் யுனிவர்ஸ் இந்தியா கிரீடத்தை கைப்பற்றிய கேரள மாடல்!
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 பட்டத்தை கேரளாவை சேர்ந்த 19 வயது கசியா லிஸ் மெஜோ(Kaziah Liz Mejo) வென்றுள்ளார்.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026
ஜெய்ப்பூரில் ஜீ ஸ்டுடியோஸில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026(Miss Universe India 2026) இறுதிப்போட்டியில் கேரளாவை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவியும், மாடலுமான 19 வயது கசியா லிஸ் மெஜோ(Kaziah Liz Mejo) வென்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் கசியா லிஸ் மெஜோ(Kaziah Liz Mejo) அதிகாரப்பூர்வமாக மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 கீரிடத்தை தலையில் சூடிக் கொண்டுள்ளார்.
கசியா லிஸ் மெஜோவிற்கு கடந்த 2025ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற மணிகா விஸ்வகர்மா கிரீடம் அணிவித்து கவுரவித்தார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம் எதிர்வரும் 75வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக கசியா லிஸ் மெஜோ பங்கேற்கவுள்ளார்.
75வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியானது Puerto Rico-வில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
கனவு நனவான தருணம்
வெற்றிக்கு பிறகு பேசிய கசியா, இந்த உலகையே வென்றது போன்ற உணர்வில் இருப்பதாக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அத்துடன் கடந்த மூன்று வருடங்களாக தன்னுடைய கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது என்றும், இந்த கீரிடத்தை தன்னுடைய சொந்த மாநிலமான கேரளாவிற்கு எடுத்துச் செல்வதிலும், என்னுடைய சொந்த ஊரை உலகிற்கு பெருமையுடன் காட்டுவதிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
Kaziah Liz Mejo from Kerala wins the Miss Universe India 2026 .
👸Look at the way she offered a quite moment of prayer before she wore the crown
👸She will represent India at the Miss Universe pageant in November. pic.twitter.com/DvzT8SFdkY
— Open Trunk | CHiCory Life (@ChicoryLife) August 25, 2026
