டெல்லியில் கனமழை: 15 விமானங்கள் ரத்து

டெல்லி,

வட இந்தியாவில் தென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

விமான சேவை பாதிப்பு
அதேபோல், கனமழையால் டெல்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் 15 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 102 விமான சேவைகள் காலதாமதமாகியுள்ளன. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் அவதியடைந்துள்ளனர். டெல்லியில் கனமழை இன்றும் தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.