அயோத்தி ராமர் கோவில் ஊழியர்கள் நலனுக்காக ரூ. 4 கோடி நன்கொடை அளித்த கோவை பெண் பக்தர்!

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயி​லில் காணிக்கை திருடப்பட்ட புகார் மீது விசா​ரணை​களும், கைதுகளும் தொடர்கின்​றன. இந்த சர்ச்சை காரண​மாக ராமர் கோயிலுக்கான காணிக்​கை​யும் குறைந்​த​தாக​வும் ஒரு தகவல் உள்​ளது. இச்​சூழலில், குழந்தை ராமர் மீதான நம்​பிக்​கை​யை​யும் கோயில் ஊழியர்​கள் மீதான மரி​யாதையை​யும் வெளிப்​படுத்​தும் ஒரு சிறப்​பான நிகழ்வு நேற்று முன்​தினம் ஸ்ரீராம ஜென்​மபூமி வளாகத்​தில் நிகழ்ந்​தது.

தமிழ்​நாட்​டின் கோயம்​புத்​தூரிலிருந்து அயோத்​திக்கு வந்த எஸ்​.​நாகலட்​சுமி என்ற பெண் பக்​தர், ராமர் கோயிலுக்​காக ரூ.10,000 நன்​கொடை அளித்​தார். அதே வேளை​யில், கோயில் ஊழியர்களுக்​காக ரூ.4 கோடிக்​கான காசோலை​யும் வழங்​கி​னார். இது​போன்ற பெரிய தொகை கோயில் கட்​டு​மானம் அல்​லது பிற ஏற்​பாடு​களுக்கு வழங்​கப்​படு​வது வழக்​கம். ஆனால், தமிழ​ரான நாகலட்​சுமி, ஊழியர்​களின் நலனுக்​காக இவ்​வளவு பெரிய தொகையை நன்​கொடை​யாக வழங்கி உள்​ளார்.

இதுகுறித்து ராம ஜென்​ம பூமி வளாகத்​தில் பரவலான பேச்சு எழுந்தது. பெண் பக்​த​ரான நாகலட்​சுமி, முதலில் பிர்லா தர்​ம​சாலா​வுக்கு எதிரே அமைந்​துள்ள ‘யாத்ரி சேவா கேந்​தி​ரா’​வில் (பயணி​கள் சேவை மையம்) தனது நன்​கொடை குறித்த விவரங்களைத் தெரி​வித்​தார். ராமர் கோயி​லில் பணிபுரி​யும் ஊழியர்​களின் வசதி​களை மேம்​படுத்​த​வும், அவர்​களின் ஊதியத்தை உயர்த்​த​வும் அந்த ரூ.4 கோடி தொகை​யைப் பயன்​படுத்த வேண்​டும் என்று அவர் எழுத்​துப்​பூர்​வ​மாகக் கோரிக்கை விடுத்​துள்​ளார்.

இதற்​கான ரசீது அவருக்கு வழங்​கப்​பட்​டது. பின்​னர் அவர் கர்வேவக்​புரத்​தில் உள்ள ​ராமஜென்​மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்​கட்​டளை​யின் கணக்கு அலு​வல​கத்​துக்​குச் சென்​றார். அங்கு அவர், கோயில் ஊழியர்​களின் நலனை உறுதி செய்​தும் ராமருக்காக செய்​யும் சேவை​யின் ஒரு பகுதி என தன் நம்பிக்கையை தெரிவித்தார்.

காணிக்கை திருட்டு தொடர்​பான தேசிய அளவி​லான சர்ச்சை நில​வும் சூழலில், கோயில் ஊழியர்​களுக்​காக ரூ. 4 கோடி என்ற பெரும் தொகையை வழங்​கியது ஒரு முக்​கிய செய்​தியை வெளிப்படுத்​தி​யது. அதாவது, ராமர் கோயி​லின் பிரம்மாண்டத்தைப் போல​வே, அங்கு பணி​யாற்​றும் ஊழியர்களின் பங்​களிப்பு மீதும் பக்​தர்​களுக்கு மரி​யாதை​யும் அக்​கறை​யும் உள்​ளது என்​ப​தை​யும்​ இந்​நிகழ்​வு உணர்​த்​தியது.

Leave A Reply

Your email address will not be published.