தமிழரசுக் கட்சியின் மூத்த பேச்சாளர் ஆலாலசுந்தரத்தின் 41ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான அமரர் அடலேறு ஆலாலசுந்தரத்தின் 41ஆவது நினைவு தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நல்லூர் தொகுதிக் கிளையினரால் நல்லூர் சங்கியன் மன்றத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில், யாழ். மாநகர சபை மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராசா, பிரதி முதல்வர் இ.தயாளன், சபை உறுப்பினர்கள், கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் அன்னாரது உறவினர்கள் கலந்துகொண்டனர்.

அமரரின் திருவுருவப் படத்துக்கு விளக்கேற்றி, மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் நினைவுரையாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.