முதியவர் ஒருவர் சுட்டுக்கொலை! கொழும்பு – பொரலஸ்கமுவவில் பயங்கரம்.

கொழும்பு, பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

உயிரிழந்த நபர் தனது வீட்டில் இருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத நபர்கள் கைத்துப்பாக்கியால் அவரைச் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இதன்போது உயிரிழந்தவர் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவராவார்.

துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.