மகாராஷ்டிராவில் சோகம்: லாரி மீது கார் மோதி விபத்து – 5 பெண்கள், 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலி!
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தின் பண்டாரா மாவட்டத்தில் உள்ள நாக்பூர்-ராய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. பிம்பல் காவ் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது, லாரியின் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி உருக்குலைந்து போனது.
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 5 பெண்கள், 3 சிறுவர்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு 9 ஆக உயர்ந்தது.
