புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் மூவர் நியமனம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் மூன்று புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றும் நீதிச்சேவையின் விசேட தர அதிகாரியான பெருமாள் சிவகுமார், நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மற்றும் நீதிச்சேவையின் விசேட தர அதிகாரி ஆனந்தி கனகரத்தினம் மற்றும் கொழும்பு மாவட்ட நீதிபதி மற்றும் நீதிச்சேவையின் விசேட தர அதிகாரி ஞானேச லலித் கண்ணங்கர ஆகியோர் புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று முற்பகல் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.


