தொழில் கிடைத்தோர் விபரம் இணையதளத்தில்
வேலைவாய்ப்பை பெற்றுள்ள பட்டதாரிகளின் பெயர் பட்டியல் இன்று அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் இணையதளத்தில் பதிவேற்றப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் நியமன கடிதங்கள் அமைச்சினால் எதிர்காலத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வேலைவாய்ப்புகளை பெற்றுள்ள பட்டதாரிகள் எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் கடமைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.