யோகிபாபுவின் அடுத்த பட அறிவிப்பு! படத்தின் தலைப்பே அசத்தல்!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு நாயகனாக நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யோகிபாபு நடித்திருந்த ‘ட்ரிப்‘ என்ற படத்தை இயக்கியிருந்த டென்னிஸ் மஞ்சுநாத்துடன் யோகிபாபு மீண்டும் இணைந்துள்ளார்.

இந்தப் படத்திற்கு, ‘தூக்குதுரை‘ எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்த முதற்பார்வை படம் (First Look) தற்போது பிரபல்யமாகி வருகிறது.

‘தூக்குதுரை‘ படத்தை அரவிந்த் வெள்ளைபாண்டியன் மற்றும் அன்புராசு கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு, கே.எஸ்.மனோஜ் இசையமைப்பதுடன் யோகிபாபுவுக்கு நாயகியாக இனியா நடிக்கவுள்ளார். அத்துடன், மொட்ட ராஜேந்தர், சென்ட்ராயன், பாலசரவணன் மகேஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த ‘விஸ்வாசம்‘ படத்தில் அஜித்தின் கதாபாத்திரப் பெயராக ‘தூக்குதுரை‘ பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் பெயரும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.