வடக்கு கிழக்கு மா வீரர் நினைவேந்தல் மத்தியில் ஒட்டப்பட்ட சுவரொட்டி…

போரில் உயிரிழந்த மக்களின் நினைவேந்தல் தொடர் நிகழ்வுகளில் புலிகளால் கொல்லப்பட்ட , அமிர்தலிங்கம் , லக்ஷ்மன் கதிரிகாமர், நீலன் திருச்செல்லம், ரஜினி திராணகம, ஶ்ரீசபாரத்தினம் , நடராஜா, துரையப்பா , மகேஸ்வரன் உள்ளிட்ட 09 பேரின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டி மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

காகிதம் மற்றும் அச்சிடும் செலவுகள் அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் வடக்கு கிழக்கு பகுதி முழுவதையும் உள்ளடக்கும் வகையில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசியத் தலைவரை விற்க முயல்பவர்களை வரலாறு மன்னிக்காது என்பதைத் தெரிவிக்கும் வகையில் துண்டுப் பிரசுரமும் விநியோகிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை இடம்பெற்ற போரில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தலின் அடிப்படையில் இந்த சுவரொட்டி பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புலிகளின் பழைய புதைகுழிகளில் நினைவுச் சின்னங்களை மீண்டும் உருவாக்கி பெருமளவிலான மக்களைக் கூட்டி இந்த கொண்டாட்டங்களை நடத்துவதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.

அதன்படி நாளை , கிழக்கில் இரண்டு பெரிய திருவிழாக்கள் தொப்பிகல மற்றும் வாகரையில் நடைபெற உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.