நாட்டை நடுங்கவைத்த மற்றொரு பகீர் சம்பவம்: கணவனை 22 துண்டுகளாக கூறு போட்ட மனைவி-மகன்

ஷ்ரதா வாக்கர் சம்பவத்திற்கு இணையாக மற்றொரு கொடூரமான கொலை வழக்கு வெளிவந்து இந்தியாவின் தலைநகரான டெல்லியை நடுநடுங்கவைத்துள்ளது.

டெல்லியில் ஷ்ரதா வாக்கர் கொலை வழக்கின் விசாரணை வலுப்பெற்று வரும் நிலையில், நகரின் கிழக்குப் பகுதியில் இதேபோன்ற ஒரு குற்றச் சம்பவத்தை பொலிஸார் முடித்து கண்டுபிடித்தனர்.

மகனின் உதவியுடன், கணவன் கொலை
கணவன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருப்பதாக சந்தேகப்பட்டு, பெண் ஒருவர் தனது மகனின் உதவியுடன், கணவனை கொன்று உடலை 22 பாகங்களாக வெட்டி, குளிர்சாத பெட்டியில் சேமித்துவைத்து, டெல்லியின் சுற்றுப்புறங்களில் பல இடங்களில் வீசியுள்ளார்.

டெல்லி பொலிஸார் கடந்த ஜூன் மாதம் பாண்டவ் நகரில் உடல் பாகங்களை கண்டுபிடித்து கொலை வழக்கு பதிவு செய்தனர். ஆனால், உடல் துண்டுகள் சிதைந்து விட்டதால், விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்த மாத தொடக்கத்தில் ஷ்ரதா வாக்கர் கொலை வழக்கின் கொடூரமான விவரங்கள் வெளிவரத் தொடங்கியபோது, ​​அடையாளம் தெரியாத உடல் உறுப்புகள் அவருடையதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது.

தற்போது அவை அஞ்சன் தாஸுக்கு (Anjan Das) சொந்தமானது என பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணையில்
தாஸ் திருமணத்திற்குப் புறம்பான உறவைக் கொண்டிருப்பதாக சந்தேகித்ததால், அவரது மனைவி பூனம் (Poonam) மற்றும் அவரது மகன் தீபக் (Dipak) ஆகியோர் ஜூன் மாதம் தாஸைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

அவருக்கு முதலில் தூக்க மாத்திரைகள் கொடுக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

திரிலோக்புரியில் இந்த குற்றம் நடந்தது மற்றும் உடல் பாகங்கள் கிழக்கு டெல்லியின் பாண்டவ் நகர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன.

சிசிடிவி காட்சிகள்
அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி கமெராக்களில் சிக்கிய அதிர்ச்சியூட்டும் காட்சிகள், தீபக் இரவில் தனது கையில் பையுடன் நடந்து செல்வதைக் காட்டுகின்றன. அவரது தாயார் பூனம் அவரைப் பின்தொடர்கிறார்.

அவர்கள் பகலிலும் உடல் பாகங்களை வீசியுள்ளார், அதுவும் சிசிடிவியில் பதிவாகியுள்ளனது. உடலின் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக பல முறை இதுபோன்று பையுடன் சென்று தூக்கி எறிந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

டெல்லி குற்றப்பிரிவு பொலிஸார் அப்பெண்ணையும், மகனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.