கிணற்றில் சடலமாக மிதந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள்! அதிர்ச்சியாக்கிய மர்ம மரணம்

தமிழக மாவட்டம் கடலூரில் சிறுமி உட்பட மூன்று பெண்கள் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றில் மிதந்த சடலங்கள்

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது விவசாய கிணற்றில் மூன்று பெண்களின் சடலங்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கிணற்றில் மிதந்த சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள்

அதன் பின்னர் பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் மிஸ்பா சாந்தி, அவரது 8 வயது மகள் மற்றும் தாய் கல்யாணி என்பது தெரியவந்தது.

மலையனூரைச் சேர்ந்த சிவகுருநாதன் என்பவர், மங்களூரில் வேலை பார்த்தபோது மிஸ்பா சாந்தியுடன் திருமணம் செய்துகொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்த விடயம் அவரது மனைவி சுமதிக்கு தெரிய வரவே இருவருக்கும் சண்டை ஏற்பட்டு, கடந்த 2016ஆம் ஆண்டு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

அதன் பின்னர், சொந்த ஊருக்கு திரும்பிய சிவகுருநாதன் தனது குழந்தைகள் மற்றும் தன் தாயுடன் வசித்து வந்துள்ளார்.

தனி வீடு

கடந்த நவம்பர் 27ஆம் திகதி தன் மகள், தாயுடன் மலையனூருக்கு வந்த மிஸ்பா சாந்தி, தங்களுக்கு இங்கேயே தனியாக வீடு பார்த்து தரும்படி கேட்டுள்ளார்.

அதன்படி சிவகுருநாதனும் அவர்களுக்கு வீடு ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு மிஸ்பா சாந்தியின் வீட்டிற்கு சிவகுருநாதன் உணவு வாங்கி சென்றுள்ளார். ஆனால் அங்குயாரும் இல்லை என்பதால் தேடிப் பார்த்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

மறுநாள் காலையில் மூவரும் கிணற்றில் சடலமாக கிடந்துள்ளனர். இது கொலையா அல்லது தற்கொலையா என பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.