இஞ்சினை விட்டு பிரிந்த ரயில் பெட்டிகள்.. ஓட்டுநர் சாமர்த்தியத்தால் தடுக்கப்பட விபத்து!

கயாவில் இருந்து டெல்லி சென்றுகொண்டு இருந்த தி மகாபோதி எக்ஸ்பிரஸ்ஸில் விபத்து ஏற்பட்டது. எனினும், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக பொறியியலாளர்கள் வந்து சரி செய்த பின்னர் ரயில் வழக்கம் போல் ஓடியது.

கயாவில் இருந்து டெல்லி சென்றுகொண்டு இருக்கும்போது ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள கயா தீன்தயாள் உபாத்யாய் ரயில் பாதையில் மகாபோதி எக்ஸ்பிரஸ் சென்றுகொண்டு இருந்தது. அப்படி ஓடி கொண்டு இருக்கும்போது திடீரென்று ரயிலின் இரண்டு பெட்டிகள் இன்ஜினிலிருந்து பிரிந்ததாக கூறப்படுகிறது.

சசரம் மற்றும் கரபாண்டியா ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. வண்டி நகர்ந்துகொண்டு இருக்கும்போதே பெட்டிகள் கழன்றதை ஓட்டுநர் மற்றும் காவலாளிகள் நல்வாய்ப்பாக கவனித்துள்ளனர். உடனே ரயிலை நிறுத்திவிட்டு அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு தகவல் சொல்லியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். சிறிது நேரம் கழித்து, ரயில்வே பொறியியல் துறை பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரயில் பெட்டிகளை மீண்டும் என்ஜினுடன் இணைத்தனர். இதற்காக 3:40 முதல் 4:22 வரை சுமார் 42 நிமிடங்கள் ரயில் நிறுத்துவைக்கப்பட்டன.

ஆனால் இந்த விபத்தால் எந்த பயணிக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஓட்டுநர் மற்றும் காவலாளியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த அலட்சியம் குறித்து ரயில்வே நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.