புது பைக்கை ஓட்டி பார்க்க தராததால் ஆத்திரம்.. நண்பரை கதற கதற தாக்கிய கொடூர இளைஞர்!

திருச்சூரில் இரவலாக கேட்ட பைக்கை கொடுக்காததால், நண்பர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய காட்சிகள் காண்போரை பதற செய்கிறது.

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஆலஞ்சேரி பகுதியில் மிதுன் என்ற இளைஞர் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இவரின் நண்பர் வைசாக் என்பவர் கடந்த நவம்பர் 28-ஆம் தேதி மிதுனுடன் பைக்கை இரவலாக கேட்டுள்ளார்.

தான் புதிதாக எடுத்த பைக்கை கொடுக்க முடியாது என மிதுன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த வைசாக், செல்போன் கடைக்குள் வைத்து மிதுனை சரமரியாக தாக்கியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் மிதுனும் கதறி கதறி அழுதுள்ளார்.

மிதுன் hemophilia நோயாளி என்பதை தெரிந்தும் வைசாக் அவரை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மிதுன் தற்போது வரையிலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்திய அடுத்த நாளே திருச்சூர் போலீசார் வைசாக்கை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் இவர் மீது வேறு பல வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. மேலும் அந்த கடையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.