பல கிராமங்களில் 40 க்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள் பலி !

கிளிநொச்சியில் பெரும் சோகத்தில் மக்கள்
தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடும் குளிரடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பல கிராமங்களில் 40 க்கு மேற்பட்ட மாடுகள் மற்றும் ஆடுகள் என்பன இறந்துள்ளன.

கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தில் தனியார் ஒருவரின் மாட்டுப் பண்ணையில் 13 மாடுகளும், புன்னை நீராவியில் 07 மாடுகளும், நாகேந்திரபுரத்தில் 05 மாடுகளும்,பூநகரியில் 05 மற்றும் ஏனைய பல கிராமங்களில் உதிரிகளாகவும் 40 க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்கள உதவிப் பணிப்பாளர் மருத்துவர் கௌரிதிலகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அத்தோடு திருவையாறு கிராமத்தில் கடும் காற்று காரணமாக மரம் முறிந்து வீழ்ந்ததில் மூன்று ஆடுகள் இறந்துள்ளதோடு, மேலும் பல ஆடுகள் மற்றும் மாடுகள் என்பன காயங்களுக்குள்ளாகியுள்ளன.

கடும் குளிருடன் கூடிய மழை மற்றும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்தததன் காரணமாகவும் இவ்வாறு கால்நடைகள் இறந்துள்ளதாகவும்.இன்று மதியம்(09) வரை மேற்படி எண்ணிக்கையை உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது என்றும் தெரிவித்த அவர் இந்த சீரற்ற காலநிலை காரணமாக இறந்த கால்நடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஏனைய கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு பண்ணையாளர் தீயிட்டு சூழலை வெப்பமாக மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.