பெரியம்மாவை கொன்று பல துண்டுகளாக வெட்டி வீசிய இளைஞர்… மற்றொரு அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அனுஜ் சர்மா. இவருக்கு வயது 35. இவர் தனது பெரியம்மா சரோஜ் சர்மாவின் வளர்ப்பில் வாழ்ந்து வந்த நிலையில், தனது பெரியம்மாவை காணவில்லை என டிசம்பர் 11ஆம் தேதி காவல்துறையிடம் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் காவல்துறை நடத்திய விசாரணையில் உண்மைகள் அம்பலமாகின. அனுஜ்ஜின் பெரியப்பா 1995ஆம் ஆண்டோ உயிரிழந்துவிட்டார். அன்றில் இருந்தே பெரியம்மா சரோஜ், அனுஜ் சர்மாவின் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். சரோஜ்ஜிற்கு ஒரு மகன் உள்ள நிலையில், அவர் வெளிநாட்டில் வாழ்கிறார். சரோஜ்ஜின் மகள்கள் இருவருக்கு திருமணமாகி கணவருடன் வாழ்கின்றனர். இப்படி இருக்க, அனுஜ் அவரது தாயர் மற்றும் பெரியம்மா சரோஜ் ஆகியோர் மட்டும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

அனுஜ்ஜின் தாயாரும் கடந்தாண்டு உயிரிழந்துள்ளார். இதையடுத்து அனுஜ்ஜும் பெரியம்மாவும் மட்டும் வீட்டில் வசித்துள்ளனர். அனுஜ்ஜின் செலவுகள், வாழ்க்கை தேவைகளை அவரது பெரியம்மா தான் கவனித்து வந்துள்ளார். பிடெக் பட்டதாரியான அனுஜ் ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவந்துள்ளார். இவர் டெல்லி குடிபெயர வேண்டும் என பெரியம்மாவிடம் கூறிவந்த நிலையில், அதை பெரியம்மா சரோஜ் ஏற்கவில்லை. இது தொடர்பான வாக்குவாதத்தில் கடந்த டிசம்பர் 11ஆம் தேதி தனது பெரியம்மாவை சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார் அனுஜ்.

பின்னர் வீட்டின் பாத்ரூமில் உடலை பல துண்டுகளாக வெட்டி அதை சூட்கேஸ்சில் எடுத்துக்கொண்டு அருகே உள்ள காட்டு பகுதி, நெடுஞ்சாலை பகுதிகளில் கொண்டு வீசியுள்ளார். இதையெல்லாம் செய்துவிட்டு பெரியம்மாவை காணவில்லை என புகார் அனுஜ் புகார் கொடுத்த நிலையில், அவரின் நடவடிக்கையை காவல்துறை கண்காணிக்கத் தொடங்கியது. அத்துடன் அனுஜ் தனது வீட்டு சமையல் அறையில் ரத்த கறைகளை சுத்தம் செய்வதை அவரது உறவினர் பார்த்துள்ளார்.

உடனடியாக உஷாராகி அனுஜ் பற்றி காவல்துறையிடம் உறவினர் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அனுஜை கைது செய்த காவலர்கள் அவரிடம் இருந்து உண்மையை வாக்குமூலமாக பெற்றுள்ளனர். ஏற்கனவே டெல்லியில் ஷ்ரத்தா வால்க்கர் என்ற பெண்ணை அவரது காதலன் பல துண்டுகளாக வெட்டி வீசி படுகொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தற்போது அதே பாணியில் மற்றொரு கொலை நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.