கிழக்கு முஸ்லிம்களைப் புறக்கணித்து எடுக்கும் தீர்வை ஏற்கமாட்டோம்!

கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் அனைத்தும் ஒன்றுகூடி கிழக்கு மாகாணத்துக்கான சம்மேளனம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனக் கேட்போர் கூடத்தில் இந்தக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதனை அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்தக் கூட்டத்தின் போது காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் கிழக்கு மாகாண சம்மேளனத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்

இதன்போது முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பேச்சில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் 3 மாவட்டங்களிலும் உள்ள சிவில் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படல் வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாமல் ஒருதலைப்பட்சமாகப் பேச்சுகள் நடைபெற்றால் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், குறிப்பிட்ட காலத்துக்குள் முஸ்லிம் மக்களுக்கான தீர்வுத் திட்ட யோசனைகள் அரசிடம் முன்வைக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.