யாழில் கூட்டு மே தினப் பேரணி.

தொழிற்சங்கங்கள், வெகுஜன மற்றும் சிவில் அமைப்புகளுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் இணைந்து நடத்திய கூட்டு மே தினப் பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

முற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் ஆரம்பமான பேரணி நகர் பகுதி ஊடாகப் பயணித்து யாழ். பொது நூலகம் முன்பாக நிறைவு பெற்றது.

இந்தப் பேரணியில், “தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி”, “அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் சம்பள முரண்பாட்டை உடனடியாக நீக்கு”, “மலையகத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்கு!”, “கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கு”, “விவசாயிகள் எதிர்நோக்கும் உற்பத்தி, சந்தைப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கு” உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.