பெரும் மக்கள் போராட்டம் இவ்வருடம் வெடித்தே தீரும்! – அரசுக்குச் சஜித் அணி எச்சரிக்கை.

கடந்த வருடம் வெடித்த மக்கள் போராட்டத்தை விடவும் பாரிய போராட்டம் இந்த வருடம் வெடிக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“2022 ஐ விட 2023 மிகவும் மோசமான ஆண்டாக அமையும். பொருளாதாரத்தின் பாரதூரத்தை அரசு அவ்வளவு உணர்ந்ததாகத் தெரியவில்லை.

எரிபொருட்களின் வரிசை மட்டும்தான் குறைந்திருக்கின்றது. வேறு எந்த முன்னேற்றமும் இல்லை. மக்கள் பெரும் துன்பத்தில் உள்ளனர்.

இலங்கை வரலாற்றில் ஒருபோதும் இல்லாத நிலை இது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்க அரசு உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை.

வட்டி வீதம் அதிகரித்துள்ளதால் வியாபாரம் செய்வது கஷ்டம். உலக சந்தையில் இப்போது எரிபொருட்களின் விலை குறைந்துள்ளது. ஆனால், அரசு இங்கு குறைக்கவில்லை.

மக்கள் இப்போது நாட்டை விட்டு ஓடுகின்றார்கள். இங்கு வாழ முடியாது. பாஸ்போர்ட் அலுவலகத்தில் வரிசை நீண்டு கொண்டே செல்கின்றது. கடந்த வருடம் வெடித்த மக்கள் போராட்டத்தை விடவும் பாரிய போராட்டம் இந்த வருடம் வெடிக்கும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.