பொங்கல் ஸ்பெஷல்: பால் பொங்கல் செய்யலாம் வாங்க…

தேவையான பொருட்கள்: பச்சரிசி – ஒரு கப் நெய் – 2 டீஸ்பூன் வெல்லம்/சர்க்கரை – 3/4 கப் பால் – 4 கப் முந்திரி – 20 உலர் திராட்சை – 20 ஏலக்காய் பொடி – ஒரு டீஸ்பூன் நெய் – தேவையான அளவு

செய்முறை:

* பச்சரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். * ஒரு குக்கரில் கழுவிய பச்சரிசியைப் போட்டு, அதில் ஒரு டீஸ்பூன் நெய் மற்றும் பாலை ஊற்றி குக்கரை மூடி, குறைவான தீயில் 3-4 விசில் விட்டு இறக்கவும்.

* விசில் போனதும், குக்கரைத் திறந்து கரண்டியால் நன்கு கிளறி, பின் அதில் வெல்லம்/சர்க்கரையைப் போட்டு கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து 2 நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து பொங்கலில் ஊற்ற வேண்டும்.

* இறுதியில் அதில் 3-4 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான பால் பொங்கல் தயார். குறிப்பு:

* பால் பொங்கல் நன்கு குளிர்ந்த பின் மிகவும் கெட்டியாக இருப்பது போன்று இருந்தால், அதில் சிறிது சுடுநீர் அல்லது சூடான பாலை ஊற்றி கிளறிக் கொள்ளலாம்.

* பால் பொங்கலுக்கு சர்க்கரை அல்லது வெல்லம் என எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

* பால் பொங்கலை குக்கரிலும் செய்யலாம் அல்லது பாத்திரத்திலும் செய்யலாம்.

Leave A Reply

Your email address will not be published.