கஞ்சிபாணியின் அடுத்த இலக்கு தேசபந்து! பொலிஸார் அறிவிப்பு.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் தலைவராக கருதப்படும் கஞ்சிபாணி இம்ரான், பொலிஸ் மா அதிபர் தேசபந்துவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அத்துருகிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நேற்று மாலை பொலிஸ் மா அதிபர் தேசபந்துவின் வீட்டிற்கு சென்று இது குறித்து அறிவித்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து, அவரது பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாகவும், பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரும் இதுவரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமை குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் கீழ் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.