பல்கலை மாணவியை கொலை செய்தவர் கைது

கொழும்பு ரேஸ்கோஸ் அரங்கிற்கு அருகில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மாணவியைக் கொன்றவர் பல்கலைக்கழக மாணவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட மாணவி மற்றும் மாணவியை கொலை செய்த இருவரும் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் வருட மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மாணவர் வெல்லம்பிட்டியவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவியை கொலை செய்த மாணவர் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டிருந்ததாக போலீசார் கருதுகின்றனர். அதற்கு முன்னதாகவே காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்துள்ளனர்.

ஹோமாகம கிரிவத்துடுவ பிரதேசத்தில் வசித்து வந்த கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் 24 வயதுடைய சத்துரி ஹன்சிகா மல்லிகாராச்சி என்ற 24 வயது மாணவியே , இன்று நண்பகல் 12.00 மணியளவில் கொழும்பு ரேஸ்கோர்ஸ் கால்பந்தாட்ட சம்மேளன கட்டிடத்திற்கு அருகில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சந்தேகத்தின் பேரில் கைதான மாணவரிடம் போலீஸார் வாக்குமூலம் பதிவு செய்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.