யாழில் சூட்டுக் காயத்துடன் ஆணின் சடலம் மீட்பு!

யாழ். தென்மராட்சி, மிருசுவில் வடக்கு வயல்கரை பகுதியில் இருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயத்தை ஒத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்த ஒருவரின் சடலத்தை மீட்ட பொலிஸார் அது தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிருசுவில் வடக்கு பகுதியைச் சேர்ந்த 34 வயதான மோகனதாஸ் என்பவரது சடலமே அது என அடையாளம் காணப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வயல்கரை பகுதி ஊடாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சமயம் கட்டுத்துவக்கு வெடித்து இவர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று பொலிஸார் கருதுகின்றனர்.

கொடிகாமம் பொலிஸார் அது தொடர்பில் விசாரித்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் காட்டுப் பன்றிகளை இலக்கு வைத்து கட்டுத்துவக்கு சட்டவிரோதமாகப் பொருத்தப்படும் வழக்கம் இருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம், சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.