யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி ஒருவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில், வேம்படிச் சந்தியில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்தில் சவரிமுத்து சகாயரூபன் (வயது 59) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தத் தகவலை யாழ். பொலிஸார் இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.