கர்ப்பிணி பெண்ணின் கணவன் அவள் அருகிலிருக்க வேண்டிய முக்கியமான தருணங்கள்…

பெண்கள் கர்ப்பமாக இருப்பது என்பது சவாலான ஒன்று. அந்த சமயத்தில் அவர்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அழுத்தங்கள் ஏற்படும். அவர்களது ஹார்மோன் நிலைகளை பொறுத்து, அவர்களது உணர்வுகளில் ஏற்ற இறக்கங்களைக் காணலாம். அவர்கள் உடலில் ஏற்படும் வலியை தாங்கிக்கொள்ளுதல் மற்றும் சில மாற்றங்களால் அவர்களது மனநிலை மாறிக்கொண்டே தான் இருக்கும். இப்படி ஒரு சூழலை அவர்கள் எதிர் கொள்ளும் பொது அவர்கள் தங்கள் கணவரை எதிர்பார்ப்பார்கள். அது எதனால் என்பதற்கான 7 காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1 உணர்வுகளுக்கு ஆதரவான நண்பனாக
கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றத்தால் பெண்களின் மனநிலை கொண்டே இருக்கும். எப்படி என்று கேட்டல்? அவர்கள் உங்களிடம் மிக இனிமையாக இருந்திருப்பார். ஆனால் அடுத்த நொடியே பயங்கரமான கோபத்தை வெளிப்படுத்துவார்கள், உங்கள் காலுறையை வீட்டினுள் அங்கும் இங்குமாக விட்டிருப்பதற்காக. இது போன்ற சமயங்களில் அவர்களின் கணவர்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும். எப்படி இருந்தாலும் அவர்கள் உங்களுடன் இருப்பதையும், நேரம் செலவிடுவதையும் விரும்புவார்கள். அவர்களுடன் நீங்கள் பேசினாலே போதும் பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும்.

2 உடல் நலம் சார்ந்த அக்கறை
உடல் வலி மற்றும் அழுத்தங்கள் போன்றவை கர்ப்ப காலத்துல ஏற்படும். அப்போ நீங்க அவர்களிடம் ஆறுதலாகவும், மென்மையா மசாஜ் செய்து உடல் வலியை போக்கவும் முயற்சிக்கலாம். அவங்களுக்கு இயற்கையாகவே உடல் சோர்வு ஏற்படும், அதனால் அதிகமாக அவர்கள் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். முற்றிலும் வேலைகளை தவிர்ப்பதால் குழந்தைக்கும், குழந்தை பிறப்பிற்கு ஆபத்தாகலாம். சமையல் அறையில் சில உணவு பொருள்கள் சமைக்கும் பொழுது ஏற்படும் வாசனை ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதனால் அவற்றை அறிந்து தவிர்க்கலாம்.

3 அவர்களை பற்றி யோசிக்கும் ஒருவர்
உணர்வுரீதியாகவும், உடல்ரீதியாகவும் அவர்களை அன்புடன் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு அறிவுரை வழங்க, சில முக்கிய முடிகள் எடுக்க, அவர்களை மாதந்தோறும் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்ல மற்றும் சில பதட்டமான சூழ்நிலைகளில் அவர்கள் அதை பகிர்ந்துகொள்ள அவர்களுக்கென ஒருவர் தேவை. அவள் தாய்மையடைந்த முதல் நாளிலிருந்தே, அவள் குழந்தை அவள் வாழ்வை ஆக்கரமிக்கிறது. அப்போதிலிருந்தே அவர்களை அன்புடன் கவனித்துக் கொள்ளும் ஒருவரை அவர் மனம் தேட ஆரம்பித்திருக்கும்.

4 ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு
கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக இருப்பது மிக முக்கியமான ஒன்று. தாய் மற்றும் குழந்தையின் உடல் நிலையே கர்ப்ப காலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய முதல் விஷயம். அதனால் தான் அவளின் குடும்பம் மற்றும் அதிலும் முக்கியமாக அவர்கள் கணவரும் பங்கு கொள்ள வேண்டும். அவர்கள் எப்போதும் இதில் கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கணவர்கள் மனதில் கொண்டு, நல்ல சத்தான உணவுகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். கணவர்கள் கர்ப்பமாக இருக்கும் மனைவியை மாதம் ஒரு முறை மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.

5 ஆரோக்கியமான குழந்தைக்கு
கருவிலிருக்கும் குழந்தையின் ஆரோக்கியமானது குழந்தையின் தாயை சார்ந்தே இருக்கும். கர்ப்பிணி பெண்கள் உடல் நலத்தை பாதிக்கும் எந்த ஒரு செயலையும் செய்ய கூடாது மற்றும் பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் மன அமைதியுடன் இருக்கும் படி அவர்களின் கணவர் பார்த்துக்கொள்ள வேண்டும். இது போல் ஆரோக்கியமான குழந்தைக்காக கணவர்கள் அவர் மனைவிகளின் உடல் நிலையில் கவனம் எடுத்து கொள்ள வேண்டும்.

6 ஒன்பதாவது மாதத்தின் போது
ஒன்பதாவது மாதம் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அப்பொழுது ஏற்படும் மன மாற்றத்தை சமாளிப்பது மிகவும் கடினமான ஒன்று. அப்போது அவர்களின் கணவர்கள் அவர்களுக்கு மிகவும் ஆறுதலாக எப்போதும் அவர்களுடனே இருக்க வேண்டும். அவர்களுடன் பேசுவது, அவர்களுக்காக சிறிய வேலைகளை செய்து கொடுப்பது போன்று அவர்களை மனதளவில் மகிழ்ச்சியுடன் இருக்க வைக்க முயற்சிக்க வேண்டும்.

7 உங்கள் இருவருடைய குழந்தை, உங்கள் மனைவியுடையது மட்டுமல்ல
குழந்தை என்பதில் கணவன் மற்றும் மனைவி இருவரின் பங்கும் இருக்கிறது. உங்கள் மனைவி மற்றும் இதற்கு பொறுப்பல்ல. எனவே உங்கள் மனைவி குழந்தையை சுமக்கும் போது ஏற்படும் வலிகள் மற்றும் மாற்றங்களில் நீங்கள் அவர்களுக்கு பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் மற்றும் அவர்களின் உணர்வுகளில் பங்கு கொள்பவராகவும் இருக்க வேண்டும்.

உங்களுடன் இணைந்து உங்களின் ஒரு பதியாகி, உங்கள் குழந்தையை சுமந்து, பெற்றெடுத்து உங்கள் கையில் கொடுப்பவள் மனைவி. அவளின் கர்ப்பகாலத்தில் அவளின் எதிர்பார்ப்புகள் உங்களிடம் அதிகமாக இருக்கும். அதை உணர்த்து உங்கள் மனைவியையும் குழந்தை போல பேண துவங்குங்கள்.

Leave A Reply

Your email address will not be published.