மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய நீர்ப்பாசன பணிப்பாளர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய நீர்ப்பாசன பணிப்பாளர்

மட்டக்களப்பு நீர்ப்பாசன பணிப்பாளராக பொறியியலாளர் நடராசா நாகரெத்தினம் நேற்று 4 ம் திகதி பதவி ஏற்றுள்ளார். கோட்டைக்கல்லாறு திரு திருமதி நடராசா நாககன்னி தம்பதிகளின் புதல்வராவார்.

இவர் ஆரம்பக்கல்வியை கோட்டைக்கல்லாறு மெதடிஸ்த மிசன் தமிழ்க்கலவன் பாடசாலையிலும் இடை நிலைக்கல்வியை கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்திலும் உயர்தரக்கல்வியை கல்முனை பார்த்திமா கல்லூரியிலும் கற்றார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பொறியியல் துறையில் பி.எஸ். சி. பட்டம்பெற்ற இவர் 1995ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ம் திகதி புனர்வரழ்வு அமைச்சில் பொறியியலாளராக நியமனம் பெற்று மட்டக்களப்பு மாவட்டச்செயலகத்தில் கடமை ஏற்றார். 1996 ம் ஆண்டு நீர்ப்பாசனத்திணைக்களத்தில் பொறியியலாளராக இணைந்துகொன்டார்.

மட்டக்களப்பு நீர்ப்பாசன பிரதிப்பணிப்பரளர் அலுவலகத்திலும், உறுகாமம், நவகிரி பிரிவு நீர்ப்பாசன அலுவலகங்களிலும் நீர்ப்பாசனப் பொறியியலாளராக பத்து வருடங்களுக்குமேல் கடமையாற்றியபின்பு அரசின் புலமைப்பரிசில் பெற்று 2007 ம் ஆண்டில் நெதர்லாந்து சென்று முதுமாணிப்பட்டம் பெற்று 2009 ம் ஆண்டு நாடு திரும்பினார்.

அதன் பின்னர் கல்கமுவ நீர்ப்பரசனப்பயிற்சிக்கல்லூரி மற்றும் பொலநறுவை, அம்பாறை நீர்ப்பாசன பணிப்பரளர் அலுவலகங்களில் பிரதம பொறியியலாளராக கடமையாற்றி 2016 ம் ஆண்டில் நீர்ப்பாசன பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று புத்தளம் நீர்ப்பரசனப் பணிப்பாளராகவும் அதனைத்தொடர்ந்து அனுராதபுரம் வட , வடமத்திய வலய நீர்ப்பரசனப் பணிப்பாளராகவும் கடமையரற்றிய நிலையில் மட்டக்களப்புக்கு இடமாற்றம் பெற்று நேற்று கல்லடியில் அமைந்துள்ள நீர்ப்பாசன திணைக்கள அலுவலகத்தில் கடமையைப்பொறுப்பேற்றார். இவர் கோட்டைக்கல்லாறு இராசதுரை இந்துமதி அவர்களின்
கணவரும் ஒரு பட்டய பொறியியலாளருமா வார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த நீர் முகாமைத்துவத்தினை இரண்டரை வருடங்கள் சிறப்பாக பணியாற்றிய நீர்பாசன பணிப்பாளர் எஸ்.எம்.வி.எம்.அசார் கொழும்பு நீர்பாசன தலைமை காரியாலயத்திற்கு பொது வேலைகள் கட்டிட சேவைகள் பணிப்பாளராக இடமாற்றம் பெற்று செல்கின்றார்.

Leave A Reply

Your email address will not be published.