நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

லக்னோ: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 0-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்நிலையில், 2-வது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டு கைப்பற்றினார்.

இதையடுத்து, 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. சுப்மன் கில் 11 ரன்னும், இஷான் கிஷன் 19 ரன்னும், ராகுல் திரிபாதி 13 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடினார்.

இறுதியில், இந்திய அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 26 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.