சுதந்திர தினத்தை புறக்கணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு

தமிழ் மக்களுக்கு உரிய முறையில் இன்னும் சுதந்திரம் கிடைக்காத காரணத்தினால்,  சுதந்திர தினத்தை புறக்கணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவித்தபோது ,

“சுதந்திரம் கிடைத்த உடனேயே ஜனநாயகம் என்ற போர்வையில் அது பெரும்பான்மை அமைப்பாக மாற்றப்பட்டது. அதனால் தான் இந்த நாட்டில் வாழும் ஏனைய மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. சிங்கள பௌத்த மக்கள் தமக்கு சுதந்திரம் கிடைத்ததாக நினைத்திருந்தனர். எனினும், தங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்று அவர்களும் கருதுகின்றனர். எனவேதான் பெப்ரவரி 4ஆம் திகதி 75வது சுதந்திர தினத்தை ஜனாதிபதி கொண்டாடும் போது இந்த நாட்டில் வாழும் எவருக்கும் அந்த சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். எனவே சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாளை , கறுப்பு நாளாக அறிவித்து, நாட்டின் சுதந்திரத்தை முறையாகப் பெறுவதற்கான இயக்கத்தைத் தொடங்கவுள்ளோம்.

Leave A Reply

Your email address will not be published.