ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனைத் தொடர்ந்து தான் தான் ஜெயலலிதாவின் மகள் என்று ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதுபோலவே ஜெயலலிதாவின் வாரிசு என்று ஒருசிலர் கிளம்பி வந்ததையும் ஊடகங்களில் பார்க்க முடிந்தது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் என்று வாசுதேவன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூர் வியாசரபுராவைச் சேர்ந்த 83 வயதான வாசுதேவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் முதல் மனைவியினுடைய மகன் தான் என்று குறிப்பிட்டுள்ளார். ஆகவே, ஜெயலலிதா சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கோரியுள்ளார்.

காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டதால் உயர்நீதிமன்ற நிர்வாக உத்தரவிற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் இம்மனு விசாரணை செய்யப்பட்டது. மனுவை பட்டியலிடுவது தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் பதிலளிக்கும்படி மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Leave A Reply

Your email address will not be published.