கர்நாடக தேர்தல்: பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்!

கர்நாடக தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நியமித்து அக்கட்சியின் தேசிய செயலாளர் ஜெ.பி. நட்டா அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளராக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அண்ணாமலை இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். மாநில தலைவர் கே. அண்ணாமலை இணை பொறுப்பாளராக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.